Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ.., நினைவிடம் திறப்பு…. நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம் – ஸ்டாலின் விமர்சனம்…!!

ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு அதிமுகவினரின் நாடகம் என்று முக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம் என மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

4 ஆண்டுகள் முடிந்தும் ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்திருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க வில்லை. ஜெயலலிதா உயிருக்கு உரிய நீதி வழங்க முன்வராத இபிஎஸ்- ஓபிஎஸ் ஜெயலலிதாவின்  நினைவிடத்தை திறக்க உரிமை உள்ளதா? திமுக ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதாவின் மரணம், கோடநாடு சம்பவத்தில் மரண தண்டனை பெற்று தரப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |