Categories
இந்திய சினிமா சினிமா

ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு போக தடை…. காரணம் என்ன?…. நீதிமன்றம் அதிரடி….!!!!

பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் சமீப காலமாக மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். இதில் சுகேஷிடமிருந்து சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த நகைகள் பரிசுப் பொருட்களை பெற்றுள்ளதாக ஜாக்குதலின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது.

இந்நிலையில் நடிகை ஜாக்குலின், பஹ்ரைனுக்கு போகவேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இது விசாரணைக்கு வந்ததை அடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி அவரிடம் இம்மனுவை நீங்களே வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் நாங்கள் இந்த மனுவின் மீது நீதிமன்ற உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என கண்டிப்புடன் சொல்லி விட்டார்.

அதனை தொடர்ந்து தன் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த ஜாக்குலின் தன் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். அதாவது, ஜாக்குலின் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால் அவர் ஊருக்கு சென்றால் இங்கே திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என நினைத்து நீதிமன்றம் இம்மனுவை நிராகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |