Categories
உலக செய்திகள்

நீதிமன்றத்திற்கே டிமிக்கி கொடுத்த அதிபர்…. கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட ஜாமீன்…. தகவல் வெளியிட்ட அதிகாரிகள்….!!

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு கருணை அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதமராக இருந்த ஜேக்கப் ஜுமா என்பவரின் மீது பலவிதமான ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது. இது தொடர்பான பல விதமான ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவர் நேரில் ஆஜராகவில்லை.

இதனால் ஜூமா நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையின் காரணமாக ஜூமா கடந்த 7ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவருக்கு கருணை அடிப்படையில் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

ஏனெனில் அவருடைய சகோதரரான மைக்கேல் காலமடைந்துள்ளதால் அவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக இந்த ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |