Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த பட்டதாரி பெண் … விரக்தியில் எடுத்த விபரீத முடிவு … சிக்கிய உருக்கமான கடிதம்…!!

கொலை வழக்கில் கைதான  பட்டதாரி பெண் ஜாமீனில் வெளிவந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் பாஸ்கர் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு பட்டப்படிப்பு படித்து முடித்த  பவித்ரா என்ற மகளும், அரவின் என்ற மகனும் இருக்கின்றனர்.  கடந்த 2019ஆம் ஆண்டு பவித்ரா அதே பகுதியில் வசித்த கற்பூர வியாபாரியான சேகர் என்பவரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார். இதனால் போலீசார் பவித்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து பவித்ராவின் தந்தை பாஸ்கருக்கு  கல்லீரல் கோளாறு இருந்தால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் .

அதன்பின் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதான பவித்ரா ஜாமீனில் வெளியே  வந்துள்ளார். இந்தச் சம்பவம் நடந்த அன்று பவித்ராவின் அம்மா தன் கணவருக்கு மதிய சாப்பாடு கொடுக்க மருத்துவமனைக்கு சென்று விட்டார். அவருடைய அண்ணனும் வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பவித்ரா மன உளைச்சசலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய பவித்ராவின் அம்மா தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து  அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பவித்ராவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து  போலீசார் பவித்ராவின் வீட்டில் தடயங்களை தேடிய போது அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் சிறைக்குச் சென்று வந்ததால் தான் மிகுந்த மன சோர்வில் இருப்பதாகவும், தந்தையின் உடல்நலம்  குறித்து மன வேதனை அடைந்ததால், தற்கொலை செய்ய போகிறேன் என்று அந்தக் கடிதத்தில் பவித்ரா எழுதி இருந்தாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |