“பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்” திரைப்பட தொடர் வாயிலாக உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகர் ஜானி டெப். இவர் திருமண வாழ்க்கையின்போது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தன் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் அடிப்படையில் அவர் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக ஜானி டெப் பதில் மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமானது, ஜானி டெப் நிரபராதிதான் என்பதோடு, அவரது முன்னாள் மனைவி தொடுத்த வழக்குகள் ஆதாரமற்றவை எனக்கூறி தீர்ப்பு அளித்தது. அத்துடன் அவதூறு பரப்பும் விதமாக பொய்யாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தற்காக ஆம்பர் ஹெர்ட் தன் முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும், அபராதமாக 38 கோடி ரூபாயும் என மொத்தம் 116 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் ஆம்பர் ஹெர்ட், அவருடனான அனைத்து வழக்குகளையும் 1 மில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக வழங்கி முடித்துக்கொள்ள இருப்பதாக அறிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.