Categories
உலக செய்திகள்

சீன அரசாங்கத்தை விமர்சித்த ஜாக் மா?…. இப்போ எங்கிருக்கிறார் தெரியுமா?…

அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் சீன அரசாங்கத்தை விமர்சித்து விட்டு ஜப்பான் நாட்டில்  தஞ்சமடைந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சீனாவில் இயங்கி வரும் அலிபாபா என்னும் பிரபல வர்த்தக நிறுவனத்தின் மீது அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை அறிவித்தது. இது, அந்நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் மாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் ஷாங்காய் நகரத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாடு ஒன்றில் சீன அரசாங்கத்தை கடுமையாக சாடினார்.

அதன் பிறகு ஜாக் மாவை காணவில்லை. பொதுவெளியில் தென்படாமல் இருந்தார். எனவே, அவரை பற்றி பல வதந்திகள் கூறப்பட்டது. ஆனால் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் சீன நாட்டின் ஆசிரியர்கள் 100 பேருடன் காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.

ஆனால் அவர் எங்கு இருக்கிறார்? என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை. இந்நிலையில் அவர் ஜப்பான் நாட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறார் எனவும் ஆறு மாதங்களாக தன் குடும்பத்தினருடன் அங்கு வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நெருக்கமான சிலர் இந்த தகவலை தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |