Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லீயை புகழ்ந்து தள்ளிய இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்…!!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 63. இந்த படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி ஜாக்கி ஷெராப் அளித்துள்ள ஒரு பேட்டியில், அட்லி ஒரு துறுதுறுப்பான இயக்குநர். அவர் கதை சொல்வதில் கெட்டிக்காரர், அவர் சொல்கிற விதம் கதை ஓட்டத்தை ஒரு கதாபாத்திரத்திறத்தில்  இருந்து இன்னொரு கதாபாத்திரத்துக்கு மாற்றிவிடும் வித்தையிலும் கெட்டிக்காரர்.

Image result for அட்லீ,விஜய்,தளபதி 63

ஒரு கதையில் நம்ம பகுதி ஹீரோயிசமா, வில்லத்தனமா என்றெல்லாம் நான் பிரித்துப் பார்க்கமாட்டேன். ஒரு கதையில் நின்று விளையாட என்ன இருக்கிறது என்று மட்டும்தான் பார்ப்பேன். அந்த வகையில் விஜய் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைப் பற்றி ரசிகர்கள் கண்டிப்பாகப்  மறக்கமாட்டார்கள். இந்த படத்தில் கால்பந்து விளையாட்டுக் கழகம் ஒன்றின் தலைவராக நடிக்கிறேன் என்று ஜாக்கி ஷெராப் கூறினார்.

 

 

Categories

Tech |