‘குக் வித் கோமாளி சீசன் 3’ யில் தாமரைச் செல்வி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரைகளில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வருபவர் தாமரைச்செல்வி.
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிய இருக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ”குக் வித் கோமாளி சீசன் 3” தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூப்பர் ஹிட் நிகழ்ச்சியில் தாமரைச் செல்வியும் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிக்பாஸ் வீட்டில் இவர் சக போட்டியாளர்களுக்கு நன்றாக சமைத்து கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.