கிறிஸ் கெய்ல் எடுத்திருந்த சாதனையை ,நேற்றைய போட்டியின் மூலம் ஜடேஜா சமன் செய்துள்ளார்.
நேற்று மும்பையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக நேற்றைய போட்டியில் ஜடேஜாவின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. பேட்டிங், பவுலிங் , பீல்டிங் என ஆல்ரவுண்டரிலும் ஜடேஜா அதிரடி காட்டி அசத்தினார். குறிப்பாக ஒரே ஓவரில் 36 ரன்கள் எடுத்து , கிறிஸ் கெய்ல் சாதனையுடன் சமன் செய்தார். வெற்றிக்குப் பின் சிஎஸ்கே கேப்டன் தோனி ஜடேஜா பற்றி கூறும்போது, ஆல் ரவுண்டர் ஜடேஜா எப்போதும் ஆட்டத்தை மாற்றக் கூடியவர். அவர் தனக்கு சாதகமாக ஆட்டத்தை மாற்றி விடுவார் ,என்று கேப்டன் தோனி ஜடேஜாவை பாராட்டினார்.
நடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற ஜடேஜா கூறும்போது, கிரிக்கெட் ஆல்-ரவுண்டராக இருப்பது மிகவும் கடினமான விஷயம் என்றார். ஏனென்றால் பேட்டிங், பவுலிங், பீல்டிங் 3 வகையான ,பயிற்சியை மேற்கொள்வது மிகவும் கடினம் என்றார். நான் பயிற்சியில் ஈடுபடும் போது ,3 வகையான பயிற்சியில் கவனம் செலுத்த மாட்டேன் என்றும், இதில் ஏதாவது ஒன்றில் மட்டும் ,கவனத்தை செலுத்தி பயிற்சியில் ஈடுபடுவேன் என்றார். கடைசி ஓவரில் தோனி அளித்த நம்பிக்கையே ,அனைத்து பந்துகளையும் தைரியமாக ,சிக்சர்களாக அடித்க முடிந்தது என்றார் .