Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஜடேஜா மேல இவ்ளோ பகையா”…! “வெளியான சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் உரையாடல்”…. ரசிகர்கள் கொந்தளிப்பு …!!!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஜடேஜாவை குறித்து அவதூறாக பேசிய தனிப்பட்ட உரையாடல் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாகவே சஞ்சய் மஞ்ச்ரேக்கரின்  கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீரரான அஸ்வினை ‘ஆல் டைம் கிரேட் ‘பிளேயர் என்று சொல்ல முடியாது என்று தெரிவித்திருந்தார். இவருடைய இந்த கருத்துக்கு, ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இது முடிவதற்குள் தற்போது ஜடேஜா குறித்து அவர் பேசிய உரையாடல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியின் போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் , ஜடேஜா ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர்  இல்லை,  என்பது போல் கருத்து கூறியிருந்தார் .இவருடைய இந்த கருத்து ஜடேஜாவை கடுப்பாக்கியது. அப்போது நடந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியின், நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடிய போது தடுமாறியது.

அந்நேரத்தில் ஜடேஜா களமிறங்கி அதிரடியாக  விளையாடி ,அணியின் வெற்றிக்கு சற்று அருகில் கொண்டு வந்தார். அவர் 59 பந்துகளில் 77 ரன்களை அடித்து விளாசினார். இதைக்கண்டு நியூசிலாந்து பவுலர்கள் திகைத்துப் போனார்கள். இந்த நிலையில் அப்போது நடந்த இந்த சம்பவம் குறித்து, ரசிகர் ஒருவருடன் மஞ்ச்ரேக்கர் ,  தனிப்பட்ட முறையில் பேசிய உரையாடல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த உரையாடலில் ,’நான் ஜடேஜாவை பற்றி கூறிய வார்த்தைகளுக்கு, ஜடேஜாவுக்கு அர்த்தம் தெரியாது . ஏனெனில் அவருக்கு ஆங்கிலம் தெரியாது. இதனால் யாரோ ஒருவர் ஜடேஜாவுக்கு விளக்கம் அளித்திருக்க வேண்டும் ‘ என்று அதில் கூறியுள்ளார். சமீபத்தில்  அஸ்வினை ‘ஆல் டைம் கிரேட்’  பிளேயர்  என்று சொல்ல முடியாது , என்ற சஞ்சய் மஞ்ச்ரேக்கரின்  கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் ஜடேஜாவை குறித்து அவதூறாக பேசி இருப்பது ரசிகர்களிடம்  மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |