ஜடேஜா வாள் சுற்றிய வீடியோவிற்கு இங்கிலாந்து அணி வீரர் கிண்டலடிக்கும் வகையில் கமெண்ட் செய்துள்ளார்
ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவழித்து வருகின்றனர். அவ்வகையில் ஆல்ரவுண்டர் ஜடேஜா தனது ஸ்டைலில் வாள் சுற்றிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு வாளானது தனது பிரகாசத்தை இழக்கலாம் ஆனால் மாஸ்டருக்கு கீழ்ப்படியாமல் இருக்காது என பதிவிட்டிருந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.
அதைத்தொடர்ந்து இதனை பார்த்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் உங்களின் வீட்டுப் புற்களை வெட்ட கத்திரி தேவைப்படும் போல ராக்ஸ்டார் என கமெண்ட் அளித்துள்ளார். இதற்கு பதிலளித்த ஜடேஜா ஆமாம், ஆனால் எனக்கு புற்களை வெட்ட தெரியாது எனக் கூறியுள்ளார். இதேபோன்று சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரரான டேவிட் வார்னர் கடந்த ஐபிஎல் விளம்பரத்தின் போது பேட்டை வாள் போல் சுற்றிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது