ஐபிஎல் தொடரில் இன்று (அக்டோபர் 17) நடைபெற்று வரும் 34ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே ஏமாற்றமளிக்கும் வகையில், சாம் கர்ரன் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த வாட்சன் – டூ பிளேசிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வாட்சன் 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாப் டூ பிளேசிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். இதையடுத்து 58 ரன்களை எடுத்திருந்த டூ பிளேசிஸ் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த தோனியும் மூன்று ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இறுதியாக அம்பத்தி ராயூடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜாவும் சிக்சர்களை பறக்கவிட்டு அணிக்கு உதவினார்.
இதன்மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக டூ பிளேசிஸ் 58 ரன்களையும், அம்பத்தி ராயூடு 45 ரன்களையும் எடுத்தனர்.இந்த போட்டியில் ஜடேஜா அடித்த ஒரு பந்து கிரவுண்டுக்கு வெளியே ரோட்டுக்கு சென்றது அப்போது அங்கு வந்த ஒரு நபர் பந்தை எடுத்துக் கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
https://twitter.com/ViruTarak44/status/1317492653076877312
https://twitter.com/Nikunj_153/status/1317495057067380736
https://twitter.com/chinna_943/status/1317488191453032448