Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜகமே தந்திரம்” ரிலீஸ்…. தனுஷ் எதிர்ப்பு…. தயாரிப்பாளர் விளக்கம்….!!!

ஜகமே தந்திரம் ரிலீஸுக்கு தனுஷ் தெரிவித்த எதிர்ப்பு குறித்து தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் “ஜகமே தந்திரம்” எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் ஜூன் 18ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ள இப்படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கிடையில் இப்படத்தை ஓடிடி வெளியிடக்கூடாது என்று தனுஷ் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்திக்கும் நடிகர் தனுசுக்கும் இடையில் ஏற்பட்ட பல கருத்து வேறுபாட்டிற்கு பின் இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த்திற்கும், தனுஷுக்கும் ஏற்பட்ட மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது, கடந்த 4 மாதங்களாக எனக்கும் தனுஷுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை சமூக வலைத்தளங்களில் பேசிக் கொண்டு வருகின்றனர். ஆனால் இது சம்பந்தப்பட்ட எந்த கருத்தும் நான் தெரிவிக்கவில்லை. தற்போது என் எண்ணம் முழுக்க நாம் தயாரித்த பல படம் உலக அளவில் வெற்றி அடைய வேண்டும் என்பதே நிறைந்து இருக்கிறது. நானும் தனுஷும் 10 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம் என்பது பலரும் அறியாத ஒன்று.

தனுஷ் இப்படத்திற்காக சொன்னது நல்லதுதான். அவர் இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். ஆனால் இவ்வளவு பெரிய பட்ஜெட்டை கையில் வைத்துக் கொண்டிருப்பது எவ்வளவு வட்டியை தரும் என்பது எனக்குத்தான் தெரியும். தற்போது உலக அளவில் வெளியாகும் இப்படத்தை அமெரிக்காவில் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக அது எனக்கு சந்தோஷத்தை தருகிறது என்று கூறியுள்ளார்

Categories

Tech |