Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே நாளில் ரிலீசா…? அதிருப்தி தெரிவித்த ரசிகர்கள்… அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு ஆலோசனை…!!

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஒரே நாளில் ஒ.டி.டி-யிலும், தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்வதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ஜகமே தந்திரம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஒ.டி.டி-யில் நேரடியாக வெளியிடப்படும் என்று பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தில் நடித்த தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்தனர். அதோடு இந்த படத்தை ஒ.டி.டி-யில் வெளியிடுவதற்கு ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனால்  ஒ.டி.டி-யில் படத்தை வெளியிடும் அதே தினத்தில் தியேட்டர்களிலும் இந்த படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் ஒ.டி.டி-யில் வெளியிட்ட அதே நாளில் ஈஸ்வரன் படத்தை இந்தியாவில் தியேட்டர்களில் வெளியிடுவதற்கு தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்ததற்கு ரசிகர்கள் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது. மேலும் ஜகமே தந்திரம் திரைப்படத்தை ஒ.டி.டி-யில், தியேட்டர்களிலும் படத்தை ஒரே நாளில் ரிலீஸ் செய்வதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சம்மதிப்பார்களா என்பதும் தெரியவில்லை. இதன் காரணமாக ஜகமே தந்திரம் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பானது விரைவில் தெரிவிக்கப்படும் என்று ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Categories

Tech |