Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜகமே தந்திரம்’ திரையரங்குகளில் வெளியாகும் என நம்புகிறேன்… நடிகர் தனுஷ் டுவிட்…!!!

நடிகர் தனுஷ் ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸ் குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’ . கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த வருடம் மே மாதம் ரிலீசாக இருந்தது . ஆனால் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது . இதையடுத்து ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் என  தகவல்கள் வெளியானது . தயாரிப்பு தரப்பின் இந்த முடிவால் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

தற்போது இந்த திரைப்படம் ஒரே நாளில் தியேட்டரிலும் ஓடிடியிலும் ரிலீஸாகும் என தகவல் பரவி வருகிறது . இந்நிலையில் நடிகர் தனுஷ் ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸ் குறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் எல்லாரையும் போல நானும் ஜகமே தந்திரம் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என நம்புகிறேன் ‘ என்று பதிவிட்டுள்ளார் . இதனால் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Categories

Tech |