ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றதற்கு ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. ஆனால் சந்திரபாபு நாயுடுவின் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வென்று படுதோல்வியடைந்தது. சட்ட மன்ற தேர்தலில் வென்றதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு தெலுங்கானா ஆளுனர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், உதய நிதி ஸ்டாலின் மற்றும் ஏராளமான தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் ஆந்திர முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய அமைச்சர்களுக்கும், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று பதிவிட்டுள்ளார்.