ஆந்திர மாநிலத்திலே உள்ள தனியார் நிறுவங்களில் 75 சதவீத பணி இடங்களை உள்ளூர் மக்களுக்கே வழங்க வேண்டுமென்ற மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அரியணையில் ஏறியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.முதல்வராக பதவியேற்றது முதல் பல்வேறு வளர்ச்சி மற்றும் அதிரடி திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவே பாராட்டும் முதல்வராக திகழ்கின்றார்.
இந்நிலையில் ஆந்திர மாநில சட்டசபையில் YSR காங்கிரஸ் கட்சியின் முக்கிய வாக்குறுதியான இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பது தொடர்பான மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மசோதாவின்படி இனி ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் 75 சதவீத பணி இடங்களை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களுக்கே வழங்க வேண்டும் என்று அந்த மசோதா வரைவு செய்துள்ளது.ஜெகன் மோகன் அரசின் இந்த நடவடிக்கையை மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.