Categories
மாநில செய்திகள்

JAI BHIM: அமேசானுக்கு நோட்டீஸ் அனுப்பிய வன்னியர் சங்கம்….!!!

ஜெய் பீம் பட விவகாரம் தொடர்பாக அமேசான் ஓடிடி தளத்திற்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த தீபாவளி அன்று நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் ஜெய் பீம் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான நாள் முதல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையும், ஒரு குறிப்பிட்ட நபரையும் அவமானம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதற்கான விளக்கத்தை நடிகர் சூர்யா தர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார்.

அதற்கான பதிலையும் நடிகர் சூர்யா அளித்துள்ளார். இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை திட்டமிட்டு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக, அப்படத்தை வெளியிட்ட அமேசான் ஓடிடி தளம், 2டி தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் ஞானவேல், சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு வன்னியர் சங்கம் சார்பாக வழக்குரைஞர் பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு, நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |