Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

JAI BHIM: சற்றுமுன் நடிகர் சூர்யா திடீர் அறிவிப்பு…!!!

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம் , தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இந்த மாதம் 2 ஆம் தேதி வெளியானது. நாட்டில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலமாக நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது பற்றியும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் இந்த திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தாலும் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக சில காட்சிகள் இருப்பதாக கூறி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் தொடர்பாக ஜெய்பீம் படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 5 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த படத்திற்கு நடிகர் சூர்யாவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சூர்யா தனது  ட்விட்டர் பக்கத்தில், ஜெய்பீம் மீதான உங்கள் அன்பு அலாதியானது. இதற்கு முன் நான் இதுபோல பார்த்ததில்லை. நீங்கள் எங்களுக்கு அளித்த நம்பிக்கைக்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கைகளை உயர்த்தி எங்களுடன் நின்றதற்கு எனது மனமார்ந்த நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |