ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இந்த மாதம் தொடக்கத்தில் ஜெய்பீம் திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியான நாள் முதலே பல சர்ச்சைகளை கிளப்பி வந்தது. இந்த படத்தில் வன்னிய சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளதாக வன்னியர் அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்த பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில் உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பார்வதிக்கு கடைசிவரை உறுதுணையாக இருந்தவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கோவிந்தன்.
இருந்தாலும் அந்த படத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த கோவிந்தனை வன்னியர்கள் அடையாளம் காட்டப்படவில்லை என்று புதிய சர்ச்சை எழுந்தது. அவர்களுக்கு மிக சரியான பதிலடி கொடுக்கும் வகையில் கோவிந்தன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நான் வன்னியர் இல்ல,கம்யூனிஸ்ட். நான் கம்யூனிஸ்டு, என்னை வன்னியர் என்றோ, படையாட்சி என்றோ சொல்லி சாதி அரசியலுக்கு இழுக்காதீர்கள் என்று ராஜாக்கண்ணு குடும்பத்திற்கு உதவிய கோவிந்தன் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.