ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த நடிகர் மணிகண்டன் இயக்கியிருக்கும் நரை எழுதும் சுயசரிதம் என்னும் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் அதிக அளவில் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெகுவாக பாராட்டப்பட்ட நடிகர் மணிகண்டன், நரை எழுதும் சுயசரிதம் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
இத்திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் அதிகமான விருதுகளை பெற்று, ஏற்கனவே, பல தரப்பினரிடமும் அதிக பாராட்டுகளைப் பெற்று விட்டது. தற்போது ரசிகர்களுக்காக OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது. இத்திரைப்படத்தில், நடிகர் டெல்லி கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.