கலைஞர் தொலைக்காட்சி, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடிகர் சூர்யா நடித்து டிஜே ஞானவேல் இயக்கி, ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்தது. இப்படம் வெளிவந்தவுடன் பல விமர்சனங்கள் எழுந்தது.
எனினும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா பழங்குடி இன மக்களின் நியாயத்திற்காக, குரல் கொடுக்கும் வழக்கறிஞராக நடித்தது, பெருமளவில் பாராட்டுக்களை பெற்றது. உண்மையில் நடந்த சம்பவத்தைக்கொண்டு, இத்திரைப்படம் எடுக்கப்பட்டதால், மக்கள் மற்றும் திரைப்பிரபலங்களிடையே பெரும் ஆதரவை பெற்றது.
#JaiBhim Television Premiere On 15 Jan, 2022@2D_ENTPVTLTD @Suriya_offl @tjgnan @prakashraaj @rajsekarpandian @RSeanRoldan @srkathiir @KKadhirr_artdir @philoedit @rajisha_vijayan @jose_lijomol#JaiBhimonKalaignarTV #Suriya #RajishaVijayan #PrakashRaj #Manikandan #LijomolJose pic.twitter.com/lzWroxOMCx
— Kalaignar TV (@kalaignartv_off) December 31, 2021
இதுமட்டுமன்றி ஐஎம்டிபியில் அதிகமான மதிப்பெண்களை பெற்று, உலக அளவில் பிரபலமடைந்தது. மேலும் நடிகர் சூர்யா, லிஜோ மோல் மற்றும் மணிகண்டனின் நடிப்பு அதிக பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தை பொங்கல் அன்று வெளியிடுவதற்கு கலைஞர் டிவி உரிமம் பெற்றிருக்கிறது. இதனை கலைஞர் தொலைக்காட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.