Categories
மாநில செய்திகள்

”ஜெயகோபால் ஜெயிலுக்கு போ” நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

பேனர் வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலை 14 நாட்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது பள்ளியக்காரனை மற்றும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு காவல்துறை சார்பில் பதியப்பட்ட வழக்கின் விசாரணை பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு காவல்துறை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.இதனிடையே இன்று இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதில் ஜெயகோபாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நீதிபதி உத்தரவிட்டார். அதில் பேனர் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால் அக்டோபர் 11-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி ஸ்டார்லி உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |