Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவிலுக்கு…..”24 கிலோ வெள்ளி செங்கல்”அசத்திய ஜெயின் சமூகத்தினர் ….!!

அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோவில் பூமி பூஜைக்கு ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் 24 கிலோ வெள்ளி செங்கல்களை கொடுத்துள்ளனர்

அயோத்தியில் நாளை ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் நடந்துவருகின்றன. விழாவில் பிரதமர் மோடி உட்பட 50 பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர். முதல் வெள்ளி செங்கல்லை பிரதமர் மோடி எடுத்துக்கொடுத்து அடிக்கல் நாட்டி வைக்கிறார். ராமர் கோவிலின் கட்டுமான பணிகளை பார்த்துக்கொள்ள ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சித்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமர் கோவில் கட்டுவதற்காக நன்கொடைகள் அறக்கட்டளைக்கு குவிந்து வருகிறது. அவ்வகையில் குஜராத் ஆமதாபாத் நகரில் நகரைச் சேர்ந்த ஜெயின் சமூக மக்கள் ஒன்றிணைந்து ராமர் கோவில் கட்டும் பணிக்காக 24 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கற்களை கொடுத்துள்ளனர். வி.எச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதிகளிடம் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் வெள்ளி செங்கல்களை வழங்கினர்.

இதுகுறித்து ஜெயின் சாமியார் கூறுகையில், “அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்படுவதற்கு நாட்டு மக்களுடன் சேர்ந்து ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். நாளை எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து ஆயிரக்கணக்கான மந்திரங்களை ஓதுவோம். ராமர் கோவில் கட்டுமான பணிகள் சிறந்த முறையில் நிறைவடைய வேண்டுமென மனதார பிரார்த்திப்போம். அதோடு ஒட்டுமொத்த சமூகத்தினரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வீடுகளில் விளக்கு ஏற்றுவார்கள்” என கூறினார்.

Categories

Tech |