சமணம் ஜெயின மதம் என்று அழைக்கப்படும் பழமையான இந்திய சமயம் சமண சமயம் என்று தமிழில் வழங்கப்படுகிறது. வீடு பேறு பெற்றவர்கள் எனும் பொருளில் ஜீனர்கள் என அழைக்கப்பட்டனர். சமண சமயத்தை பின்பற்றுகிறவர்கள் சமணர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஜீ எனும் சொல்லுக்கு ஜெயிப்பது, வெல்வது என்பது பொருள் ஜீ என்ற சொல்லுடன் னர் சேர்ந்து ஜீனர் என்ற சொல் தோன்றியது. ஜீனர் என்றால் வெல்பவன் என்று பொருள். பிறவியில் ஏற்படும் இன்ப துன்பங்களை அகற்றி வினைகளை வென்றவர் ஜீனர் என்று அழைக்கப்படுகின்றனர்.
தமிழில் சமண மதம் எனும் அழைக்கப்படும். தமிழில் அரகன் என்றும் அழைப்பர். அரகன் என்ற சொல்லிற்கு வணங்குதற்கு அருகதை உடையவன் என்பது பொருள். அருகக் கடவுள் என்றும் அழைப்பர். 1008 திருநாமங்களை உடையவர் அவற்றுள் சில சிறப்பு பெயர்கள்
- பகவான்
- சீனு
- விமலன்
- ஜெகநாதன்
- லட்சுமிபதி
- சித்தன்
- அச்சுதன்
சமண சமயம் தோன்றிய வரலாறு
மிகப் பழமையான நாகரிகமாக கருதப்படும் மொகஞ்சதாரோ ஹரப்பா காலத்திலேயே சமண சமயம் தோன்றியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரீகத்தில் உருவவழிபாடு சமணர்களால் உருவாக்கப்பட்டது. சமணர்களின் சின்னங்களில் எருதும் ஸ்வஸ்திகமும் இருக்கின்றன.அவை மொகஞ்சதாரோ ஹரப்பா அகழாய்வு இடங்களில் காணப்படுகின்றன. சமண சமயத்தின்படி ஒவ்வொரு தீர்த்தங்கர்க்கும் ஒரு சின்னம் இருந்துள்ளது.அதன்படி முதல் தீர்த்தங்கர் சின்னம் எருதாகும். ஏழாம் தீர்த்தங்கர் சின்னம் ஸ்வஸ்திகம் ஆகும். இது மொகஞ்சதாரோவில் பழக்கத்தில் இருந்துள்ளளது.
சாலைகளும் தெருக்களும் ஸ்வஸ்த்திக வடிவில் அமைக்கப்பட்டுள்ளன எனவே இந்தியாவில் திராவிட நாகரீகம் வெற்றி பெற்றிருந்த காலத்திலேயே சமண சமயம் இருந்திருக்க வேண்டுமென்று வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் ஆரியர் வரும் முன்னர் வாழ்ந்த திராவிட மக்களின் சமயம் சமணமாக இருக்கலாம் என்றும் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே வேதங்கள் எழுதப்படுவதற்கு முன்பாகவே ஜெயின தர்மம் இருந்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை.