மறைந்த ஜெய்பால் ரெட்டி மறைவு மீதான இரங்கல் தீர்மானத்தில் வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டு அழுதது மாநிலங்களவையை சோகத்தில் ஆழ்த்தியது.
இன்று காலை மாநிலங்களவை கூடியதும் மறைந்த ஜெய்பால் ரெட்டிக்கு இரங்கல் தெரிவித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வாசித்த வெங்கையா நாயுடு, ஆந்திர அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஜெய்பால் ரெட்டியுடன் இருந்த நட்பு குறித்த நினைவுகளை வெளிப்படுத்தினார்.
மேலும் ஜெய்பால் ரெட்டியுடன் இருந்த 40 ஆண்டுகால நட்பு , அரசியல் பழக்கம் குறித்து வெங்கையா நாயுடு பேசிய போது , 1980_ஆம் ஆண்டு காலங்களில் ஆந்திர மாநில சட்டசபையில் இருவரும் இணைந்து பணியாற்றியது குறித்து பேசி , ஜெய்பால் ரெட்டியின் மறைவு தன்னை பெரிதும் பாதித்துள்ளதாக மாநிலங்களவையில் கண்கலங்கி அழுதார்.