ராஜஸ்தான் மாநிலம், அஜ்மர் நகரிலுள்ள சோட்டி நக்ஃபானி என்னும் பகுதியில் 26 வயதுடைய நிஷா என்ற பெண் தன்னுடைய கணவருடன் வாழ்ந்துவந்தார். இந்தநிலையில், நேற்று அப்பெண் அவரது வீட்டில் திடீரென்று, சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அஜ்மர் நகர் போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். அதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணங்களில் விசாராணை நடத்தி வருகின்றனர்.