சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிஸ் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியர் இருவர் விசாரணைக்காக காவலர்களால் அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இதனையடுத்து அவர்களது குடும்பத்தினருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் தமிழக அரசால் இழப்பீடாக ஏற்கனவே வழங்கப்பட்ட து. ஜெயராஜ் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தலைமை செயலகத்தில் ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.
ஜெயராஜின் மூத்த மகளான பெர்ஸிஸ்க்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கான நியமன ஆணை முதலமைச்சர் வழங்கினார். முதலமைச்சரிடம் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையைப் பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் ஜெயராஜ்யின் மூத்த மகள் பெர்ஸிஸ் அப்போது அரசு வேலையை கொடுத்ததற்காக தமிழக அரசுக்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தமது தந்தை மரணத்தில் அரசு நீதியை நிலைநாட்டும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.