Categories
தேசிய செய்திகள்

“இந்தியா – அமெரிக்கா உறவை ஒன்றும் செய்ய முடியாது”… பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பதிலடி…!!

அமெரிக்கா மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையே உள்ள உறவை பாக்கிஸ்தான் பிரதமரால் ஒன்றும் செய்ய இயலாது என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தாக்குதல் மட்டும் இல்லாமல், இந்தியா – பாகிஸ்தான் சீனா – அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளில் விரிசல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது பாகிஸ்தான் பிரதமர் ஒரு சர்ச்சை கருத்தை பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ளார். அதாவது, பத்திரிகை பேட்டி ஒன்றில், இம்ரான் கான் பேசியபோது, சீனா நம்பிக்கைக்கு உரிய கூட்டாளி என்று புகழ்ந்துள்ளார்.

சீனாவை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா, இந்தியாவை பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்துள்ள ஜெய்சங்கர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுவது அவரது நாட்டுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய ஒன்று என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும்  இந்தியாவுக்கு தனிப்பட்ட நாகரீகம் என்பது உள்ளது என கூறிய அவர், ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னால் கிடைத்த சுதந்திரத்தை பெரும் பொக்கிஷமாக இந்தியா பார்த்து வருவதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Categories

Tech |