Categories
தேசிய செய்திகள்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை….. இராணுவம் அதிரடி …!!

ஜம்முவில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட்தாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்முவில் உள்ள அமர்நாத் புனித யாத்திரை நடத்துபவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து ஜம்முவில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஜம்மு பாதயாத்திரைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீருக்குள் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத்  ஆசார்ரின் சகோதரர் இப்ராஹீம் ஆசார்  உட்பட பயிற்சி பெற்ற 15 பேர் ஊடுருவ முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியது.

Image result for ஜெய்ஷ்-இ-முகமது

இதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க தீவிரமான தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அங்குள்ள சோப்பூர் பகுதியில் நடைபெற்ற  என்கவுண்டரில் 2 பயனகரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் , அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் , வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்து. இவர்கள் இருவரும்  ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |