ஜம்முவில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் ஆசாரின் சகோதரர் இப்ராஹீம் ஆசார் உட்பட 15 பேர் ஊடுருவ முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமர்நாத் புனித யாத்திரை நடத்துபவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து ஜம்முவில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஜம்மு பாதயாத்திரைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்க்கு மிக முக்கியமான காரணம் ஏதேனும் சிறு அசம்பாவிதம் நடந்தாலும் கூட அது கன்னியாகுமரி வரை எதிரொலிக்கும் எனப்தற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் பார்க்கப்பட்டுகின்றது.
அதே போல தற்போதும் ஜம்முவில் நடைபெறும் துர்க்கை அம்மன் யாத்திரையும் நிறுத்தி வைக்கப்படுள்ளது.இந்நிலையில் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் ஆசார்ரின் சகோதரர் இப்ராஹீம் ஆசார் உட்பட பயிற்சி பெற்ற 15 பேர் ஊடுருவ முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஜம்முவில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகின்றது.