Categories
உலக செய்திகள்

ரஷ்யா சென்ற ஜெய்சங்கர்..! மாஸ்க்கோவில் செம டிஸ்க்ஸ்… ஸ்டராங் ஆகும் இந்தியா- ரஷ்யா உறவு ..!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபின் முதன்முறையாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். அங்கு நேற்று அவர் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லவ்ரோவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய ஜெய்சங்கர், இந்தியா – ரஷ்யா உறவு சீராகவும்,  காலத்தை கடந்தும் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

இதில் இரு தரப்பு ஒத்துழைப்பு, சர்வதேச நிலவரங்கள் பற்றிய எங்கள் பார்வை,  பரஸ்பர நலன்களில் அது ஏற்படுத்தும் தாக்கம் போன்றவை பற்றி பேச இருக்கின்றோம். சர்வதேச நிலவரத்தை பொருத்தமட்டில் கடந்த சில வருடங்களாக கொரோனா தொற்று, நிதி அழுத்தம், வர்த்தக சிக்கல்கள் போன்றவை உலக பொருளாதார முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக உக்ரைன் – ரஷ்யா போர்,  பயங்கரவாதம்,  பருவநிலை மாற்றம் போன்றவை நிலையான பிரச்சினைகளாக இருப்பதுதான் முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எங்களின் பேச்சு வார்த்தை ஒட்டுமொத்த உலக சூழ்நிலைக்கு தீர்வை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |