Categories
மாநில செய்திகள்

மாஸாக என்ட்ரி ஆகப்போகும்……ஜல்லிக்கட்டு ஜாம்பவான்கள்…..பட்டய கிளப்பும் பொங்கல் …!!

பொங்கல் விழா வருவதால் காளைகள்  ஜல்லிக்கட்டுக்காக தயாராகி வருகின்றது.

தைப்பொங்கல் வந்தாலே மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சந்தோசம் பொங்கும். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் பங்குபெற்று பரிசுகளை பெறுவதற்காக காளைகளும் மாடு பிடி வீரர்களும்  பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.மதுரைக்கு பக்கத்திலுள்ள மாடக்குளத்தில் உள்ள அனைவருமே ஜல்லிக்கட்டுக்காக தீவிரமாக உருவாகி வருகிறார்கள் .

50க்கும் மேல் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் அதிகாலை முதல் காளைகளை ஜல்லிக்கட்டுக்காக தயார்படுத்தி வருகின்றனர். பயிற்சி எடுக்கும் போது காளைகளுக்கு தேவையான  கொத்தமல்லி ,கற்றாழை, உப்பு, மஞ்சள் பொடியை,சுடுதண்ணீர்,ஆகியவற்றை உணவாகவும் , நீச்சல்  பயிற்சியிலும் ஈடுபடுத்தி வருகின்றனர். தினம் தோறும் காளைகளுக்கு உரிய,மண் குத்துதல்,நடை பயிற்சி, போன்ற பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு ஆரம்பிப்பதற்கு முன் 30 நாட்கள்  காளைகளுக்கு சத்து மிக்க தீனிகள் கொடுக்கப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கும் காளைகள் சோர்வடையாமல் இருப்பதற்காக இந்த மாதிரி பயிற்சிகள் உறுதுணையாக இருக்கும் என்று காளைகளின்  சொந்தக்காரர்கள்  கூறுகின்றனர்.நாட்டுக் காளைகளை தங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்க்கும் மாடக்குளம் கிராமத்தினர் நாங்கள் பயிற்சிகொடுக்கும்  காளைகள் கண்டிப்பாக  பரிசுகளை தட்டிப்பறிக்கும்  என நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |