பண்டிகைகள் மற்றும் விடுமுறை காலம் நெருங்கி வருவதால் பெண் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் பெண் பயணிகளுக்கு தனியாக இருக்கைகள், படுக்கைகள் ஒதுக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பை ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டு உள்ளார். நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் பெண்கள் பாதுகாப்பாகவும், சவுகரியமாகவும் பயணம் செய்வதற்காக பெண் பயணிகளுக்கென தனி சீட்டுகள் மற்றும் கூடுதல் வசதிகள் ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அதன்படி நீண்ட தூரம் பயணிக்கும் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 6 Sleeper Class பெட்டிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
இதேபோன்று 3 AC Class பெட்டிகளில் பெண்களுக்கு 6 பெட்டிகள் ஒதுக்கப்படும். ஒதுக்கீடு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் பெண்களுக்கு எந்த வயது வரம்பும் கிடையாது. மேலும் அவர்கள் தனியாகவும் அல்லது மற்ற பெண்களுடன் குழுவாக வந்தாலும் இந்த ஒதுக்கீட்டில் பயணம் செய்யமுடியும். பெண் பயணிகள் மற்றும் அனைத்து ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த சீட் ஒதுக்கீடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ரயிலில் இருக்கும் பெட்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சீட் ஒதுக்கீடு மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.