ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் பிடித்து வைத்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விண்ணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுகொல்லை பகுதிகளில் தனியார் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்குவாரியில் இருந்து செயற்கை மணல் மற்றும் ஜல்லி துகள்கள் போன்றவை லாரிகள் மூலமாக காட்டுக்கொல்லை பகுதியிலிருந்து ரங்காபுரம், விண்ணமங்கலம், அய்யலூர் குப்பம் ஆகிய பகுதிகளின் வழியாக ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பல நிறுவனங்களுக்கு கட்டுமான பணிகளுக்காக விற்பனை செய்து வருகின்றனர்.
இதனையடுத்து கென்னடிகுப்பம் பகுதியின் சாலை வழியில் தினமும் 100-க்கும் அதிகமான லாரிகள் வந்து செல்வதால் பொதுமக்களுக்கு இடையூர் வருவதாகவும் மற்றும் ஜல்லி துகள்கள் சாலையில் விழுந்து அருகில் இருக்கும் வீடுகளின் வாசல்களில் நிரம்பி கிடைப்பதனால் பொதுமக்கள் இது குறித்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த வித முறையிலும் உரிய நடவடிக்கை எடுக்காததால் கல்குவாரிக்கு சொந்தமான லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த துணை காவல்துறை சூப்பிரண்டு சரவணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் காரணத்தினால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர்.