பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டியை சில கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் வருடம் 2021 பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. இந்த போட்டிகளை நடத்துவதற்கும், பங்கேற்பதற்கும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதாவது ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து இல்லை என்ற மருத்துவர் சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம். போட்டிகளை நடத்துபவர்கள்,பார்வையாளர்கள் என அனைவருமே முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். மேலும் அனைவரும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.