அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த பூவாய்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது .போட்டி நடைபெறும் முன் புனித அந்தோணியார் தேவாலயத்தில் காளைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின் சீர்வரிசை தட்டுகளுடன் காளைகளை அழைத்து சென்று சென்று, அங்கு வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்ட வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப் பாய்நது செல்லும் காளைகளை வீரர்கள் அடக்கிப் பிடிக்கும் காட்சியை காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர். இந்த போட்டியில் 450 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்