கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் வருடந்தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் பல்வேறு கொரோனா நெறிமுறைகள் உடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு நடத்த அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் ஜனவரி 14, 15, 16 தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில கொரோனா விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு ஜனவரி 9ஆம் தேதி முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், ஜனவரி 11ம் தேதி முதல் காளைகளுக்கான முன்பதிவு நடைபெறும் என்றும்தெரிவித்துள்ளது.