தமிழர் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
மதுரை அவனியாபுரத்தில் 700 காளைகள், 650 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு. காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது . மேலும் விழாவில் அமைச்சர் உதயகுமார் எம்எல்ஏக்கள் மாணிக்கம், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்கும்.
காவல் ஆணையர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் சுற்றில் 75 வீரர்களில் 11 பேர் வரவில்லை மற்றும் ஒருவர் தகுதி இழப்பு 63 வீரர்கள் சோதனைக்கு பின் களத்திற்குள் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
நிபந்தனைகள்:
காளைகளின் கொம்பு மற்றும் வாலை பிடிக்க கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு இரண்டாவது சுற்றில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.