ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று பரமக்குடி வருவாய்க்கு உட்பட்ட கிராமங்களிலும், இன்று அபிராமம் உள் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களிலும் ஜமாபந்தி நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து 22ஆம் தேதி கமுதி வட்டத்தில் உள்ள கிராமங்களிலும், 23ஆம் தேதி மேற்கு வட்டத்திலுள்ள கிராமங்களிலும், 24ஆம் தேதி கோவிலாங்குளம் பகுதியில் இருக்கும் வருவாய் கிராமங்களிலும் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.
மேலும் வருகின்ற 25ஆம் தேதி பெருநாழியில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து கிராமங்களில் வருவாய் தீர்வாயம் கணக்கு முடிக்கும் பணிகளும் நடைபெற உள்ளது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் இ-சேவை மையங்கள் மூலம் ஜமாபந்தி தொடர்பான மனுக்களை வருகின்ற 31ம் தேதி வரை அளிக்கலாம் என கமுதி தாசில்தார் மாதவன் கூறியுள்ளார்.