ஆஸ்திரேலியாவை சேர்ந்த 52 வயது சுழற்பந்து வீச்சாளரான ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதேசமயம் நேற்று மாரடைப்பு காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரோட் மார்ஷ் உயிரிழந்தார்.இதனால் ஒரே நாளில் இரு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தது இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 2-ம் நாள் ஆட்ட தொடக்கத்தில் போது மறைந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஷேன் வார்ன் மற்றும் ரோட் மார்ஷ் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்திய அணி வீரர்கள் 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.அதோடு இந்திய அணி வீரர்கள் இன்றைய நாள் ஆட்டத்தில் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.