கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஜமேசா முபின் வீடுகளில் இருந்து ரெண்டு எல்பிஜி சிலிண்டர், மூணு ட்ரம். அதில் என்ன பொருட்கள் இருந்தது ? அப்படிங்கிறது தடையவியல் ரிப்போட்டுக்கு அனுப்பி இருக்கின்றோம், சீக்கிரம் வந்துரும். கைது செய்யப்பட்ட நபர்களில் மூன்று நபர்கள் சிசிடிவி ஃபுட்டேஜில் இருந்தவர்கள். இந்த மூணு பேரு ரியாஸ், நவாஸ், ஃபெரோஸ் இந்த மூன்று நபர்கள் முபினுடைய வீட்டிலிருந்து, குண்டுக்கு தேவையான பொருட்கள், சிலிண்டர் இதெல்லாம ஏத்துறதுக்கு துணை புரிஞ்சு இருக்காங்க.
தெரிந்து கொண்டே உதவி பண்ணி இருக்காங்க. இப்போதைக்கு புலன்விசாரணை என்ன பண்ணி இருக்கிறோம் ? அப்படிங்கறது என்னால் சொல்ல முடியும், இந்த அளவில் இன்வெஸ்டிகேஷன் இருக்கு. எல்லாருமே அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தான். ஏற்கனவே சொன்னது மாதிரி மூணு பேரு சிலிண்டர் தூக்குவதற்கு ஹெல்ப் பண்ணி இருக்காங்க. ஒருத்தரு இந்த வாகனம் கொடுத்திருக்காரு, ஒருத்தர் இதனை ஒருங்கிணைத்துள்ளார்.
பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல், அலுமினியம் பவுடர், சல்பர் இது போன்ற பொருட்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இது சம்பந்தமா எல்லாமே சீஸ் பண்ணி, கோர்ட்டுக்கு ஏற்கனவே ரிப்போர்ட் சமிட் பண்ணி இருக்கோம். மொத்தமாக 75 கேஜி இருந்தது. NIAயில் என்ன வாக்குமூலம் சொல்லி இருக்காங்க ? அதற்கு பிறகு அவர்களுடைய நடவடிக்கைகள் என்னென்ன இருந்திருக்கு ? எல்லாமே புலன் விசாரணை செய்கின்றோம்.
எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் பாதுகாப்பு போட்டு இருக்கோம். ஏற்கனவே நிறைய இடங்களில் சிசிடிவி இருக்கு. இல்லாத இடங்களில் கண்டிப்பா வைக்க சொல்றோம். கோவையில் 11 செக் போஸ்டர் இருக்கு. இந்த செக் போஸ்ட் தவிர இன்னும் அதிகமா போட்டு இருக்கு. தேவையான இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தியுள்ளோம்.
இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, இதுக்கிடையில் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் பேசிட்டு இருக்கோம். பொதுவாக மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். எந்த பிரச்சனையும் இல்லை. இந்த தகவல்கள் எல்லாமே புலன்விசாரணையில் சேகரித்து பண்ணிக்கொண்டிருக்கும். கண்டிப்பா எல்லா கோணத்திலும் நாங்கள் விசாரணை செய்வோம் என தெரிவித்தார்.