ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தியூர் ஆட்டையாம்பட்டி பகுதியில் ரவி மகன் ரமேஷ் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக இருந்தார். கடந்த வருடம் மே மாதம் ரமேஷ் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரும், அ.தி.மு.க. ஒன்றிய மகளிர் அணி தலைவியுமான சாந்தா என்பவரை குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ரமேஷ் ஜாமீனில் வெளியே வந்து தன்னுடைய தந்தையுடன் வசித்து வந்தார். இதனையடுத்து ரமேஷ் கருப்பனார் கோவில் அருகில் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ரமேஷை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.