ஜம்மு-காஷ்மீர் தொடர்பான அனைத்து வழக்குகளையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்முவில் சிறப்பு சட்டப்பிரிவு 370_ஐ ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று தற்போது அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்றும் தலைமை நீதிபதி அறிவித்திருக்கிறார்.இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில் பொதுமக்களுக்கு அங்கு சரிவர எந்தவித அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை, யாரும் செல்ல முடியாத சூழ்நிலை நீடிக்கின்றது , எங்களது உறவினர்களை பார்க்க கூட அனுமதி இல்லை என்று தனித்தனியாக பல்வேறு மனுக்களை தனிநபர்கள் தாக்கல் செய்தனர்.இதில் உச்சநீதிமன்றம் எந்த ஒரு தனிநபரும் ஜம்மு-காஷ்மீருக்கு தொடர்பு கொள்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் , அதற்கான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.