ஜம்மு-காஷ்மீர் மீண்டும் மாநிலமாக மாற்றப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக ஜம்மு-காஷ்மீரில் துணை இராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் இந்தியா முழுவதும் என்ன நடக்க போகின்றது என்ற எதிர்பார்ப்பும் , பதற்றமும் நிலவி வந்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து நடந்த இன்று காலை நடைபெற்ற பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.பின்னர் நடைபெற்ற விவாதத்தில் ஜம்மு காஷ்மீர் எவ்வளவு நாட்களுக்கு யூனியன் பிரதேசமாக செயல்படும் என்று கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அமித்ஷா , காஷ்மீரில் உள்ள மக்களுக்கு இயல்பு நிலை திரும்பியதுமே மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்க தயாராக இருக்கின்றோம். இதற்கு சிறிது காலம் பிடிக்கும். கண்டிப்பாக ஜம்மு காஷ்மீர் ஒருநாள் மாநிலமாகும். சரியான நேரத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிப்பதாக தெரிவித்தார்.