ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்ட பிரிவு 370_தை ரத்து செய்யும் மசோதா மீது விமர்சித்த எதிர்கட்ச்சியினருக்கு அமித்ஷா கடுமையாக கேள்வி எழுப்பினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370- வது சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கான மசோதாவை இன்றைய மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதுதொடர்பாக இன்று நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ், திமுக, மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சியின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் மத்தி அரசின் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். இதற்க்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா , ஜம்மு காஷ்மீரின் சிறப்பு சட்ட பிரிவு 370 பயங்கரவாதம் செயல்படுவதற்குதான் வழிவகை செய்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வரும் பயங்கரவாதத்திற்கு 370 சிறப்பு சட்ட பிரிவுதான் காரணம். இது பெண்களுக்கு எதிரானது. இதனால் மாநில வளர்ச்சி பாதித்து , வறுமை நிலவுவதற்கும் காரணமாக இருக்கின்றது. மாநிலத்திலுள்ள சுற்றுலா, மருத்துவம், கல்வி மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படுவதற்கு இந்த சிறப்பு சட்டப்பிரிவு 370 முக்கிய காரணமாக இருக்கின்றது. மத்திய அரசிடம் காஷ்மீருக்கான சுகாதாரத் திட்டம் உள்ளது. ஆனால் அங்கு மருத்துவமனைகள் எங்கு உள்ளது? காஷ்மீரில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளார்களா? சட்டப்பிரிவு 35ஏ-க்கு ஆதரவு கொடுப்பவர்கள் பதிலளியுங்கள் என்று அமித்ஷா பேசினார்.