Categories
உலக செய்திகள்

எதுக்காக இப்படி செய்யுறாங்க…. பதவிக்கு அடித்தளமிடும் நோக்கமா…? ராஜ குடும்ப தம்பதியினரின் செயல்கள்….!!

பிரத்தானியா நாட்டு இளவரசர் மற்றும் அவரது மனைவி இருவரும் ஒபாமா தம்பதியினரை முன்மாதிரியாக கொண்டு செயல்வடுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிரித்தானிய நாட்டு இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் விண்ட்சர் மாளிகையிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் முன்னாள் அமெரிக்கா அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவிடம் வாழ்க்கை தொடர்பான ஆலோசனைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஹரி மற்றும் மேகன் இருவரும் ஒபாமா தம்பதியுடன்  நீண்ட கால நட்புறவில் உள்ளனர். இதற்கு ஹரியின் மனிதநேய மற்றும் ராணுவ சேவைகள், காயமடைந்த ராணுவ வீரர்களுக்காக நடத்தி வரும்  Invictus Games போன்றவை ஒபாமா தம்பதிக்கும் அவர்களுக்கும் இடையில்  நல்ல உறவினை உருவாக்கியுள்ளது. இதனை அடுத்து 2018ல் மிச்சேல் ஒபாமா லண்டனில் உரையாற்றிய போது ஒரு தீவிர ரசிகையாக அதில் மேகன் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து ஹரிமேகன் தம்பதியினர் ஒபாமா மிச்செல் தம்பதிகளை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.  இதனை பல நிகழ்வுகளில் காணலாம். அதற்கு சான்றாக, ஒபாமாவின் பதவிக்காலம் முடிந்ததும் இருவரும் புத்தகங்கள் எழுதுவது, சொற்பொழிவுகளில் உரையாற்றுவது, தொண்டு நிறுவனம் போன்ற செயல்களை செய்து வருகின்றனர். அதே போல ஹரிமேகன் தம்பதியினரும்  புத்தகங்கள் எழுதுவது,  நெட்ஃப்ளிக்ஸ் ஒப்பந்தங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து ஹரி மேகன் தம்பதியினருக்கு அமெரிக்க அரசியலில் ஈடுபாடு உள்ளதை கடந்த தேர்தலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதில் மேகன் “வெறுப்பூட்டும் வகையில் பேசுவதை மக்கள் நீக்க வேண்டும்” என்று ட்ரம்ப் அவர்களை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இதற்கு ட்ரம்ப் மேகனா அப்படியென்றால் யார் என கேட்டு அவரை ஏளனமாக பேசியுள்ளார். மேலும் மிச்சேல் ஒபாமாவின் உடை அலங்காரத்தையும் மேகன் பின்பற்றுகிறார். இதே போன்று இரு தம்பதியர்களும் ஒரே மாதிரியான வீடுகள், ஓபரா போட்டிகள், தொண்டு நிறுவனங்கள் என பல செயல்களில் ஒத்துள்ளனர். இந்த நிலையில் ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகு ஒபாமா ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்கு 400,ooo  டாலர்கள் வாங்கியுள்ளாராம். ஆனால் அதையே மிஞ்சும் அளவிற்கு ஹரி வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் ஒபாமா தம்பதியினரை முன்மாதிரியாக கொண்டு செயல்படுவதால் அமெரிக்கா ஜனாதிபதி பதவிக்கு அடித்தளமிடுகிறார்களோ என்ற சந்தேகங்கள் அனைவரிடத்திலும் எழும்பியுள்ளது.

Categories

Tech |