ஜனநாயக குடியரசு நாட்டில் பயங்கரவாத வன்முறை தாக்குதல் 30 லட்சம் குழந்தைகளின் வருங்கால மிக ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது.
காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் கிழக்கு மண்டலத்திற்கு சேர்ந்த பகுதிகளில் போராளிகள் ஆயுதங்களை கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் மீது கடுமையாக தாக்குதலை ஏற்படுத்தி வருகின்றன. இந் நிலையில் கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு தப்பிச்சென்று பாதுகாப்பாக நெருக்கடியான பகுதிகளிலும் வாழ்கின்றனர். பல குடும்பங்கள் தன் குழந்தைகளுடன் உணவு ,நீர் மற்றும் சுகாதாரம் என அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். மேலும் போராளிகளிடம் சிக்கும் மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டும் வருகின்றனர். அதுமட்டுமன்றி போராளி குழுக்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொல்வது மட்டுமல்லாமல் பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள் மற்றும் கிராமங்களையும் தீ வைத்து கொளுத்தி அழித்து விடுகின்றனர்.
இதனைப் பற்றி யுனிசெப் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் 50 லட்சம் பேர் உள்நாட்டிலேயே கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புலம்பெயர்ந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த கொடூர போராளிகளால் வடக்கு மற்றும் தெற்கு கிவு பகுதி மற்றும் தங்கனியிகா போன்ற 4 கிழக்கு மாகாணங்கள் மிக அதிகமாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பாதிப்படைந்தவர்களில் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் குழந்தைகளே ஆகும். இதில் ஐந்து லட்சம் குழந்தைகள் ஐந்து வயதிருக்கும் கீழ் உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போராளி குழுக்களின் அட்டகாசத்திற்கு நில விவகாரங்கள் ஆயுதங்கள் கிடைப்பது மற்றும் பலவீன அரசாங்கம் ஆகியவை இவர்களின் வன்முறைக்கு காரணமாக கூறப்படுகின்றன.