மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவின் மந்திரியாக இருப்பவர் அகில கிரி. இவர் பாஜகவை சேர்ந்த சுவேந்த அதிகாரியின் நந்திகிராமம் தொகுதியில் கூடி இருந்த பொதுமக்களின் முன்னாள் பேசியது, சுவேந்த அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாய் இருக்கிறார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களின் தோற்றத்தில் அடிப்படையாக அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றம் அளிக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து அவரது இந்த பேச்சை கேட்ட மக்கள் ஆரவாரம் செய்தனர். சிரிப்பொலியும் எழுந்தது. அவரது இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாஜக எம்.பிக.யான சவுமித்ரா கான் தேசிய மகளிர் ஆணையத்துக்கு வேண்டுதல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “அகில் கிரியை உடனடியாக கைது செய்ய வேண்டும். கிரிக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எம்.எல்.ஏ. பதிவிலிருந்து அவரை நீக்க முயற்சிக்க வேண்டும்” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.