ஜாங்கிரி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: அரிசி 25 கிராம், உளுத்தம் பருப்பு 200 கிராம், சர்க்கரை ஒரு கிலோ, லெமன் கலர் பவுடர், நெய் தேவையான அளவு, சிறிதளவு ரோஸ் எசென்ஸ். இப்போது, அகல பாத்திரம் ஒன்றில் சர்க்கரையுடன் நீர் சேர்த்து, எசென்ஸ் மற்றும் லெமன் கலர் பொடியையும் சேர்த்து பாகு நன்றாக பதம் வரும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
அதன் பிறகு, அதனை இறக்கி விட வேண்டும். அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு இரண்டையும் ஊறவைத்து நன்றாக மாவு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வானலியில் நெய்யை ஊற்றி சிறிது நேரம் கழித்து அரைத்து வைத்த மாவை ஜாங்கிரி பிழியக்கூடிய கருவிக்கொண்டு அதில் பிழிந்து சுற்ற வேண்டும்.
நன்கு சிவப்பு நிறமாக மாறியவுடன் அதனை எடுத்து சர்க்கரை பாகில் போட வேண்டும். தற்போது இனிப்பான ஜாங்கிரி தயாராகிவிட்டது.